மதுரை காமராஜ் பல்கலையில் 'பொறுப்பு' தேர்வாணையராக நாட்டுப்புறவியல் துறை தலைவர் தர்மராஜ், டீனாக உயிரியல் துறை தலைவர் சந்திரசேகர் தொலைநிலைக் கல்வி இயக்குனராக கூடுதல் தேர்வாணையர் ராமசாமி ஆகியோரை துணைவேந்தர் கிருஷ்ணன் நியமித்தார்.
இப்பதவிகள் முறையே வகித்த ரவி, நல்லகாமன், விஜயதுரை ஆகியோர் பதவிக்காலம் முடிவுற்றதால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாஜி துணைவேந்தர் செல்லத்துரையால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டு சர்ச்சையான அனைவரின் பதவிக்காலமும் இவர்களுடன் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது பதிவாளர் உட்பட அனைத்து முக்கிய உயர் பதவிகளையும் 'கூடுதல் பொறுப்பாக' பேராசிரியர்கள் கவனிப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...