கொரோனாவில் பள்ளிகளெல்லாம் மூடபட்டுள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் முறையான கட்டுப்பாடின்றி தவறான செய்கைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்ட சூழலில் வருங்கால சந்ததியினரான மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க சிந்தனை கேள்விக்குறியாக மாறி வருகிறது
. தொற்றினை தவிர்க்க வீடுகளில் இருக்க அறிவுறுத்தி பள்ளிகள் திறக்கப்படாத போது இவர்கள் வெளியே கூட்டமாக சுற்றி திரிவதும், தவறான சிந்தனைகளுக்கும் ஆட்பட்டு விடுகின்றனர்.
தனியார் பள்ளிகள் மற்றும் சில சுய நிதி பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து மாணவர்களை ஓரளவு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லாததால் இவர்களின் ஒழுக்க சிந்தனை மாறி்வருவதாக பெற்றோர் பரிதவிப்பில் உள்ளனர்.
சரவணன், ஆசிரியர்: தொடர் வகுப்புகள் நடக்கும் போதே மாணவர்களை நெறிப்படுத்த அதிக கவனம் தேவைப்பட்டு வந்தது
. தற்போது வகுப்புகளே இல்லாமலும் அவர்களின் அறிவுப்பசிக்கு தகுந்த ஒருங்கிணைப்பு இல்லாமல் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுத்து வருகின்றனர். அடித்தட்டு மாணவர்களிடையே இந்த வேறுபாடு அதிகம் தெரிகிறது.
நேரத்தை எவ்வாறு போக்குவது என்று தெரியாமல் கிடைக்கும் சிறிய வேலைகளுக்கும் சென்று கைகளில் பண புழக்கத்தை பார்த்து விடுகின்றனர். இவை கட்டுப்பாடற்ற செயல்களுக்க உரமாக அமைந்து விடுகிறது.
எல்லாருக்கும் உள்ளது தானே என்று கருதாமல் பெற்றோர் மாணவர்களின் செயல்களை கண்காணித்து வழிநடத்தினால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும், என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...