தமிழகத்தில் கல்லூரிகளை நவ.16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. எனினும், கரோனா 2-வது அலை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக துறை அமைச்சர்கள் மற்றும் நிபுணர் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை(நவ.12) ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின் கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்தஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்துகல்லூரி பருவத்தேர்வுகளை மார்ச்மாதத்துக்குள் நடத்த உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தேர்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் எனவும், அதற்கு கூடுமானவரை கல்லூரிகளையே தேர்வு செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும்,கல்வி ஆண்டு கால அட்டவணைதிருத்தப்பட உள்ளதாகவும் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...