சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற தகுதி வாய்ந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 52 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் துணைக் கலந்தாய்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ள துணைக் கலந்தாய்வு அறிவிக்கையைத் தொடர்ந்து, மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக நவ.3- ஆம் தேதி முதல் நவ.7- ஆம் தேதி வரை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...