தமிழகத்தில் பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 453 அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 81 ஆயிரத்து 42 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டு 10,655 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 8,023 விண்ணப்பங்கள் தகுதியானவையாக இருந்தன. இவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் அக். 27ல் துவங்கி கடந்த 7ம் தேதி முடிந்தது. விண்ணப்பித்தவர்களில் 1,169 பேர் ஆப்சன்ட் ஆகினர்.
எனவே 7,014 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி கூறுகையில்,
‘‘ மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு ஆணையை டவுன்லோடு செய்து தக்க கல்லூரியில் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம்’’ என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...