விவசாய நிலங்களில் ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிக்காக தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராஜேஷ்குமாருக்கு சீன அரசு ரூ.75.60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற கப்பல் படை வீரர் ராமசாமி மகன் ராஜேஷ்குமார். இவர் சீனாவின் ஹாங்ஜோவில் உள்ள ஜேஜியாங் பல்கலையில் அணு ஆராய்ச்சி பிரிவு ஆராய்ச்சியாளராக உள்ளார்.
ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க சீன அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்தில் பிற நாட்டின் ஆராய்ச்சியாளர்களும் திட்டங்களை சமர்ப்பிப்பர்.
அந்த வகையில் 2021 ம் ஆண்டிற்கான நேஷனல் நேச்சுரல் சைன்ஸ் பவுண்டேஷன் ஆப் சீனா (என்.எஸ்.எப்.சி.,) ஆராய்ச்சி அமைப்பு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ராஜேஷ்குமார் ஆராய்ச்சி திட்ட அறிக்கையை அங்கீகரித்து நிதியுதவி அளித்துள்ளது.
அவர் கூறியதாவது:பல்வேறு கழிவுகள் மூலம் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் சுற்றுச் சூழலும் பாதிக்கிறது.கழிவுகள் வினைமாற்றத்தை மண்ணிற்குள்ளேயே கட்டுப்படுத்தி மலட்டுத் தன்மை ஏற்படாதவாறு தடுப்பது தான் இந்த ஆராய்ச்சி. 2024க்குள் முடிவுக்கு வரும்.
இந்தியாவிலும் இதுபோல் ரூ.40 லட்சத்திற்கான ஒரு ஆராய்ச்சி திட்டம் நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலையில் மேற்கொள்ள மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறைக்கு (டி.பி.டி.,) சமர்ப்பித்துள்ளேன் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...