பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், இந்தியாவில் வருகிற டிசம்பர் 5, 6 தேதிகளில் இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் உள்ள எவரும் டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் டிசம்பர் 6 இரவு 12 மணி வரை இரு நாள்களுக்கு நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம். மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்கள், தொடர்கள், விருது பெற்ற ஆவணப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கலாம்.
வார இறுதி நாள்களில் அனைத்து பயனர்களும் பயன்பெறும் வகையில் இலவச சேவை வழங்கப்படும் என கடந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் அறிவித்தது. அதன்படி, நாட்டில் உள்ள அனைவருக்கும் வார இறுதியில் இலவச சேவை வழங்குவதன் மூலம் எங்கள் சேவையின் தரம் குறித்து முழுவதுமாக பயனர்கள் அறிந்துகொள்ள முடியும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் தெரிவித்தார்.
இந்த இலவச சேவையைப் பெற பயனர்கள் netflix.com/StreamFest என்ற தளத்தைக் காணவும். உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...