சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்கு துறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது. இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 1 வருடம் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை, மாநகராட்சிகளில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb) மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு சட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go) கொண்டு வந்தற்கும் தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது.
தேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
ஓவிய , ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்.
எனவே ஐயா தாங்கள் எங்களுக்கு
விரைவில் பணி ஆணை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.
பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது
செய்ய வேண்டுகிறோம் என முதல்வருக்கு தேர்வர்கள் கோரிக்கை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...