தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை இடங்களில் சேருவதற்கு 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் அதிகமான தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன. இதற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கையில் 86,326 பேர் விண்ணப்பித்தனர். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-ம்கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நவ.7-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு, தேர்வான மாணவர்களின் பட்டியல் இன்று(நவ.11) அந்தந்த பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படவுள்ளன.
ஒரு பள்ளியில் அதிகளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் நாளை (நவ.12) வருவாய்த் துறை அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்பு குலுக்கல் மூலம்குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். இந்த குலுக்கலில் பெற்றோரும்பங்கேற்கலாம். நேர்மையான முறையில் குலுக்கல் நடப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...