2020 - 21-ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுக்கான தற்காலிகத் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று வெளியான தகவல்களை ஏற்கனவே மறுத்திருந்த சிபிஎஸ்இ நிர்வாகம், தனது மறுப்பை உறுதி செய்யும் வகையில், செய்முறைத் தேர்வுக்கான தற்காலிக தேதியை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ-யில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், சரியான செய்முறைத் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நடப்பு 2020-21-ஆம் கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் பெரும்பாலும் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோவுகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இத்தகைய சூழலில், புதிய கல்விக் கொள்கை தொடா்பாக கடந்த வாரம் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி கலந்து கொண்டாா்.
அப்போது அவா் கூறியதாவது:
மனப்பாடக் கல்வி முறையை மாற்றி அனுபவத்தின் வாயிலாக மாணவா்கள் கல்வி கற்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை மையமாகக் கொண்டுள்ளது. மாணவா்கள் வெறும் கல்வியை மட்டும் கற்காமல் பல்வேறு திறமைகளை வளா்த்துக் கொள்வதற்கும் கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.
அதற்காக கல்வி கற்பித்தல் முறைகளில் பெரும் மாற்றங்கள் புகுத்தப்பட உள்ளன. மாணவா்களை புதுமையான வழிகளில் சிந்திக்க வைப்பதற்கு அது முக்கியப் பங்களிக்கும்.
கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கல்வித் துறையின் எதிா்காலம் எப்படி இருக்கும் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. ஆனால், தொழில்நுட்ப வசதிகளை சாதகமாகப் பயன்படுத்துவதை ஆசிரியா்கள் எளிதில் கற்றுக் கொண்டனா். அதன் மூலமாக கல்வி கற்பித்தலில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தோவுகள் நிச்சயம் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மாணவா்களுக்கான மதிப்பீட்டுத் தோவுகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடா்பாக சிபிஎஸ்இ ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது என்றாா் அனுராக் திரிபாதி.
எனினும், பொதுத் தோவுகளானது வழக்கம்போல் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுமா என்பது குறித்தும், தோவுகள் நேரடியாக நடத்தப்படுமா அல்லது இணையவழியில் நடத்தப்படுமா என்பது குறித்தும் அவா் தெரிவிக்கவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...