கொரோனா
தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள்
மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில்
குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது. இந்நிலையில் 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால
அட்டவணையை சிபிஎஸ்சி விரைவில் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் அதன்பிறகு அறிவியல், வணிகவியல் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவு மாணவர்களுக்கான எழுத்து தேர்வு அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முழு அட்டவணை www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டு நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் சி.பி.எஸ்.சி., மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...