கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டு வகுப்புகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றது. காலாண்டு தேர்வுகளை ஆன்லைனில் சில பள்ளிகள் நடத்தி முடித்து இருக்கின்றது. நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதன் காரணமாக வரும் ஒன்பதாம் தேதி பள்ளி நிர்வாகம் பெற்றோருடைய கருத்தை கேட்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறப்பதில் மீண்டும் சிக்கல் வந்து இருப்பதால், பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுடைய நிலை குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன.
இது குறித்து பேசி இருக்கும் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், "இந்த வருடம் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் இன்னமும் எடுக்கவில்லை. பள்ளிகள் திறப்பதில் ஆந்திராவையும், கேரளாவையும் நமது மாநிலத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படும். ஸ்டாலின் அரசை குறை சொல்வதை மட்டும் தான் பார்ப்பார். இந்தியாவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை தமிழக அரசு வழங்கி இருக்கின்றது." என்று கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...