இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக UGC இணை செயலாளர் சௌகான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மத்திய அரசு வகுத்துள்ள இட ஒதுக்கீடு கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலினத்தவர், பின்தங்கிய வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை தவறாமல் அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், அந்தந்த
மாநிலங்களின் இட ஒதுக்கீடு கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,
பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல்
இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இட
ஒதுக்கீட்டு விகிதாச்சாரங்களின்படி, இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை
தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் நிரப்பப்டாமல் காலியாக இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், மாணவர் சேர்க்கை, ஆகியவற்றை தாமதமின்றி நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...