பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர்உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு ஜுன் 23-ல்நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...