நீட் விவகாரத்தில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தெலங்கானா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர், ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் உதவிகளை அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் இழப்புகள் ஏற்படும்போது நாம் உதவி வருகிறோம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் 7 ஆண்டு காலம் மட்டுமே செல்லுபடியாகும். அதை ஆயுட்காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு மாத காலத்துக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ், ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும்.
நீட் தேர்வு விவகாரத்தில், தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...