நாங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ( 2002 முதல் ) தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ( SSA + RMSA ) வரை 18 | ஆண்டுகளாக சுமார் 1500 பணியாளர்களுக்கு மேல் தொகுப்பூதிய பணியாளர்களாக மாநிலம் முழுவதும் பணியாற்றி வருகிறோம் . எங்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளித்து வரப்பட்டது. கடைசியாக 2017 ம் ஆண்டு 20 சதவீத ஊதிய உயர்வு தரப்பட்டது . அதன் பின் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் . தொகுப்பூதிய பணியாளர்களாகிய கணினி வகைப்படுத்துநர் , பொறியாளர்கள் , கணக்காளர்கள் , கணினி விபரப் பதிவாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் மிக குறைந்த ஊதியம் பெற்று வருகிறோம் என்பதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கருணை கூர்ந்து தமிழ்நாடு முதல்வர் அவர்கள் எங்களுக்கான ஊதிய உயர்வினை வழங்க ஆவணம் செய்திடவும் , எங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் வழிவகை செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவில் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது . தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்காக அயராது செயலாற்றிவரும் தங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் என்றும் துணை நிற்போம் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...