2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 , பிரிவு 12 ( 1 ) ( சி ) யின்படி 25 % ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கான வழிமுறைகள் விரிவாக வழங்கப்பட்டு , முதற்கட்டமாக இணையதளத்தில் 27.08.2020 முதல் 25.09.2020 வரை விண்ணப்பித்து குலுக்கல் மற்றும் குலுக்கலின்றி தகுதியுள்ள குழந்தைகளை தெரிவு செய்து பெற்றோரின் முழு சம்மதத்துடன் பள்ளியில் அக்குழந்தை சேர்க்கை செய்ததை உறுதி செய்த பின்னர் EMIS இணையதளத்தில் பள்ளியின் வாயிலாக பதிவேற்றம் செய்யத் தெரிவிக்கப்பட்டது . அப்பணி முடிவுற்றதா என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்து ( Completion certificate ) முதற்கட்ட பணி முடிவுற்றதற்கான சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இப்பணி முழுமையாக முடிவடைந்த பின்னரே இரண்டாம் கட்டத்திற்கான காலி இடங்கள் EMIS தளத்தில் அளிக்க இயலும்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
இப்பொருளின் மீது தனிக்கவனம் செலுத்தி பணியை முடிக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். EMIS இணையதளத்தில் முதற்கட்ட சேர்க்கை 24.10.2020 -
க்குள் ( சனிக்கிழமை ) பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , 24.10.2020 -க்குப் பிறகு முதற்கட்ட சேர்க்கை இணையதளத்தில் மேற்கொள்ள இயலாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...