Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

M.Phil , Ph.D - 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய CEO உத்தரவு!

ஈரோடு  முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்.
IMG_20201006_230620

அரசாணை ( 1 டி ) எண் -18 பள்ளிக்கல்வி ( இ 2 ) துறை நாள் -18.01.2013 ன் படி , பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் எம்.பில் அல்லது பி.எச்டி . , பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான உயர்கல்வி தகுதியாக கருதி , அதாவது ஒரு ஆசிரியரின் மொத்தப்பபணிக்காலத்தில் அதிகப்பட்சமாக இரு ஊக்க ஊதிய உயர்வுகளே அனுமதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு இவ்வாணை வெளியிடப்பட்ட நாள் முதல் அதாவது 18.01.2013 முதல் வழங்கலாம் என பார்வை ( 2 ) -ல் காண் அரசு முதன்மைச் செயலாளர் கடித ( நிலை ) எண் -129 பள்ளிக்கல்வி ( பக 5 ( 2 ) ) 2013 -1 நாள் -17.07.2013 அன்று தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருள் சார்பாக , ஈரோடு மாவட்டம் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் , தற்போது பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் | உயர் / மேல்நிலைப்பபள்ளி தலைமையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் நிலையில் எம்.பில் . , அல்லது பி.எச்டி . , பட்டம் 18.01.2013 முன்னர் ஊக்க ஊதியம் பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயம் பார்வை ( 1 ) -ல் காண் அரசாணையின் படி மட்டுமே ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சில பட்டதாரி ஆசிரியர்கள் 18.01.2013 ற்கு முன்னரே தேர்வு எழுதிய நாளுக்கு அடுத்த நாள் முதல் ஊக்க ஊதியம் பெற்றுள்ளதால் பள்ளித் தலைமையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திடத்திருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டினை சரிபார்த்தும் , பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திடத்திருந்து பதவி உயர்வு பெற்று உயர் | மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும்.

M.Phil Incentive - CEO Proceedings Full Details - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive