இங்கு மனு செய்யமுடியாது. இவற்றை மதிப்பீடு செய்ய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைமுறைகளை முழுமையாக அறிந்து ெகாள்ளாமல் மனு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரருக்கு ேஜஇஇ நுழைவுத்தேர்வில் மதிப்பெண் முறை தெரிந்துள்ளது. இந்த மனுவை அனுமதித்தால் ஏராளமான வழக்குகள் தாக்கலாகும். மதிப்பெண் பட்டியலில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டியது வரும். இதனால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்படும். வரைபடத்தேர்வில் ஒவ்வொரு நிலைக்கும் மதிப்பெண் கேட்கிறார் மனுதாரர். இதை பார்க்கும் போது திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி கதை தான் நினைவுக்கு வருகிறது.
அந்தப்படத்தில் தருமியின் கோரிக்கையைப் போல, மனுதாரரின் கோரிக்கையையும் ஏற்க முடியாது. வரைபடத் தேர்வின் விடையை வெப்சைட்டில் வெளியிட வேண்டியதில்லை. இந்த வழக்கில் மனுதாரருக்கு, அடுத்த தேர்வில் வெற்றிப்பெற வாழ்த்து சொல்வதை தவிர வேறு நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...