தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கல்வித்துறையில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பதவிக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட கல்வி அலுவலருக்கான மொத்த காலிப்பணியிடம் 18.
இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 4 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் கடந்த முறை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தில் நிரப்பப்படாத 2 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 20 பணியிடங்களில் 6 பணியிடங்கள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இப்பணியிடத்திற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ந்தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவு 2019 மே 23 ஆம் தேதி வெளிவந்தது.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவர். அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 27 முதல் 29 வரை மூன்று தேர்வுகள் சென்னையில் நடத்தப்பட்டது.
முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அந்தவகையில் முதன்மைத் தேர்வு அடிப்படையில் நேர்காணலுக்கு தகுதி பெற்ற 47 பேரின் விவரங்கள் இம்மாதம் 7ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் நேற்று 19.10.2020 ல் நடைபெற்ற நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் இம்மாதம் 8 ந்தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது.
அதன்படி 20 மாவட்ட கல்வி அலுவலருக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. நேர்காணல் தேர்வு நிறைவு பெற்றதும் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய இறுதி மதிப்பெண் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி நேற்று இரவே இணையத்தில் வெளியிட்டது.
இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மேலப்பாளையம் குறிச்சி புனித தோமையார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி.ரா.சங்கீதா சின்னராணி என்பார் 485 மதிப்பெண் பெற்று அரசு நிதியுதவி பெறும் ஆசிரியரிகளில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். (பதிவு எண்:260006049).
இதுகுறித்து சங்கீதா சின்னராணி கூறுகையில் நான் கடந்த 21 ஆண்டுகளாக திரு இருதய சபை சகோதரர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்.எனது நிறுவனத்தின் ஊக்கமும் எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் எனது கடின உழைப்பும்தான் இன்று அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிடத்திற்கு தமிழக அளவில் நான் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் பணிநியமனம் இருக்கும். எனது பணியில் நான் நேர்மையாக சிறப்பாக செயல்படுவேன் என்று கூறினார்.
அதைப்போன்று பொதுப்பிரிவில் (Open Market ) கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குழிவிளையைச் சேர்ந்த ஷெர்லின் விமல் 643.75 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்று இருக்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...