இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் பண பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்படி, புதிதாக வழங்கப்படும், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்க முடியாது.
இதனால், இந்த கார்டுகளை ஒட்டுமொத்தமாக பயன்படுத்த முடியாதா என, பயப்பட தேவை இல்லை. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கார்டுகளில், அனைத்துசேவைகளும் இடம் பெற்றிருக்கும். ஆனால், அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை, தேவைப்படும் போது செயல்படுத்திக் கொண்டு, இதர நேரங்களில், அதை, நிறுத்தி வைத்து கொள்ளலாம். இதற்கு, ஏ.டி.எம்., இயந்திரத்தில், இதர சேவைகள் என்ற பிரிவுக்குள் சென்று, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேவைகளை, மீண்டும் செயல்படுத்தி கொள்ளலாம்.
தேவையில்லாத நேரங்களில், அதை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.அவ்வாறு நிறுத்தி வைக்கும் போது, கார்டுகள் தொலைந்து போனால், அதை, மற்றவர்களால் பயன்படுத்த முடியாது.இதன் வாயிலாக, வாடிக்கையாளர்களின் பணத்தை, தொழில் நுட்ப ரீதியில் திருடுவது தவிர்க்கப்படும்.இந்த வசதி, ஆன்லைன் வங்கி சேவையிலும் இடம் பெற்றிருக்கும். அதிலும், தேவையான சேவைகளை மட்டும் செயல்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே வைத்துள்ள கார்டுகள் பழைய முறைப்படி செயல்படும்; அதில், மாற்றம் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...