இந்தியக் கணக்குக் தணிக்கையாளர் மையம் நடத்தும் சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.
இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் ஆடிட்டர் பணிக்காக சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு பிஹார் தேர்தல் காரணமாக மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெறும் என இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அறிவித்துள்ளது
மேற்குறிப்பிட்ட தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 1-ம் தேதி வெளியாகிறது. கட்டுப்பாட்டு மையங்களில் வசிக்கும் மாணவர்கள், நவம்பர் 2020இல் இறுதித் தேர்வுகளை எழுத வேண்டி இருக்கும்பட்சத்தில், கட்டணம் செலுத்தியது, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்தையும் மே 2021 ஆம் பருவத் தேர்வுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற உடனேயே சிஏ படிப்புக்குப் பதிவு செய்யும் வகையில், இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் மையம் விதிகளைத் திருத்தி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...