மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
மருத்துவ படிப்பில் தமிழகத்தில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத தமிழக ஒ.பி.சி. மாணவர்களுக்கு ஒதுக்க கோரி தமிழக அரசு, அதிமுக, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.சி.க்கான இட ஒதுக்கீட்டை இறுதி செய்து அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துவத்துவதற்கு தமிழக அரசு அதிகாரி, மத்திய அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது.ஆனால் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில், தமிழக அரசு, அ.தி.மு.க, மற்றும் கேவியட் மனுதாரரான திமுகவைச் சேர்ந்த டி.ஜி.பாபு ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உறுதி ஆகிவிட்டதால் , அதை நடப்பு கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும் என்றும், எந்த தாமதமும் தேவையில்லை என்று தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வமான வாதத்தில் தெரிவித்தது. ஆனால், தமிழக ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு 50% அல்லது 27% என எந்த இடஒதுக்கீட்டு முறையையும் நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில், வரும் திங்கட்கிழமை, நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...