ஐஏஎஸ் பணி வழங்கக் கோரி
மாற்றுத்திறனாளி பெண் தொடுத்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை அக் .21 : பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஐஏ எஸ்பணி
ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை , முறை யாக பின்பற்றவில்லை என
கோரி மதுரையைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பெண் தொடுத்த
வழக்கில் மத் திய அரசு , மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது . மத்திய நிர்வாகத்
தீர்ப்பாயத்தில் , மதுரையைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி
பெண் பூரணசுந்தரி தாக்கல் செய்த மனுவில் , கடந்த 2019 - ஆம் ஆண்டு நடந்த
குடிமைப்பணி கள் தேர்வில் 286 - ஆவது ரேங்க் பெற்றேன் . எனக்கு இந்திய வரு
வாய்ப் பணியில் , வருமான வரித்துறையில் பணி ஒதுக்கீடு செய் யப்பட்டது .
பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கீட்டில் வழங்க
வேண்டிய இடஒதுக்கீடு முறையாக பின் பற்றவில்லை . மாற்றுத்திறனாளிகள் சட்டம்
2016 - இன் படி எனக்கு ஐஏஎஸ் பணி வழங்க மத்திய அரசு , மத்தியப் பணியாளர்
தேர்வாணையத் துக்கு உத்தரவிட வேண்டும் . இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்
றாமல் மேற்கொள்ளப்பட்ட பணி நியமன ஒதுக்கீட்டை ரத்து செ ய்ய வேண்டும் என
கோரியிருந்தார் . இந்த மனுவை விசாரித்த மத் திய நிர்வாகத் தீர்ப்பாயம் ,
மனு தொடர்பாக மத்தியப் பணியாளர் துறை செயலர் மற்றும் மத்திய அரசுப்பணியாளர்
தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது . மேலும் கடந்த 2019 - ஆம் ஆண்டு
குடிமைப் பணிகள் தேர்வின்படி வழங்கப்பட்ட நியமன ஒதுக் கீடு இந்த வழக்கின்
இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்த ரவிட்டு விசாரணையை வரும் 2021 -
ஆம் ஆண்டு ஜனவரி மாதத் துக்கு ஒத்திவைத்துள்ளது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...