வாகன
ஓட்டுனர்களுக்கு ஒரு நல்ல செய்தி, இனி நீங்கள் பயணம் செய்யும் போது,
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் நகல்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை. வாகன சோதனையின் போது, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர்சி
எனப்படும் பதிவு எண் சான்றிதழ், காப்பீட்டு சான்று நகல், பெர்மிட் நகல்
ஆகியவற்றின் டிஜிட்டல் நகல்களை காண்பித்தாலே போதுமானது என்று மத்திய
போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்தகைய டிஜிட்டல்
சான்றுகளின் நகல்கள் இன்று முதல் சட்டப்பூர்வமாக செல்லும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் வெறுமனே சான்றிதழ்களின் புகைப்படங்களை காண்பிக்கக் கூடாது என்றும் மாறாக செல்போன்களில் டிஜிலாக்கர் ஆப் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் தணிக்கை என்ற பெயரில் நடைபெறும் ஊழலை தடுக்கும் விதமாக இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகளை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு உதவும் நலன் சாமானியன்களின் பெயர், முகவரி போன்றவற்றைக் கேட்டு போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...