தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணி விதி எண் .2 - இன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரியில் இடப்பெயர்வு செய்ய வழிவகை உள்ளது எனவும் , எனவே , 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கும் விதமாக , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு , நியமனம் பெற்று , தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களையும் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களில் கல்வியியல் கல்லூரியில் பணிபுரிய தகுதியுள்ள 10 ஆசிரியர்கள் என மொத்தம் 16 ஆசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு இடப்பெயர்வு செய்து ஆணை வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
2 . கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் நன்கு பரிசீலிக்கப்பட்டது . அதனடிப்படையில் , 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கும் விதமாக , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்று தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களையும் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களில் கல்வியியல் கல்லூரியில் பணிபுரிய தகுதியுள்ள 10 ஆசிரியர்கள் என மொத்தம் 16 ஆசிரியர்களை பின்வருமாறு அவர்களின் பெயர்களுக்கெதிரே உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு இடப்பெயர்வு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது :
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...