பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகளை அளிப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
முதலில் மாவட்ட ஆட்சியா்களுடனும், இதன்பின்பு மருத்துவ நிபுணா்களுடனும் அவா் ஆலோசிக்க உள்ளாா்.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவது, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேசமயம், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியன தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மருத்துவ நிபுணா்களுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி விவாதிப்பாா் எனத் தெரிகிறது.
மேலும், பண்டிகைக் காலங்களில் பொது மக்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வதை வலியுறுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசிக்கவுள்ளாா். பண்டிகைக் காலங்களுக்கு முன்பாக தளா்வுகளை அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் என்பதால் புதன்கிழமை நடக்கவுள்ள கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...