எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு, வரும், 27ல் துவங்குகிறது.
547 எம்.பி.பி.எஸ்.,
நாடு முழுதும், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 15 சதவீத எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.இதன்படி, தமிழகத்தில், 547 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் 15 பி.டி.எஸ்., இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன.
இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்படஉள்ளது. இதில், 2020 - -21ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, டி.ஜி.எச்.எஸ்., எனப்படும், மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம், www.mcc.nic.in என்ற இணையதளம் வாயிலாக நடத்த உள்ளது.கலந்தாய்வுக்கான தேதி விபரங்களை, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி, நேற்று அறிவித்தது. அதன் விபரம்:முதல்கட்ட கலந்தாய்வுக்கு, 'நீட்' தேர்வில் தகுதி பெற்ற மாணவ - மாணவியர், இணைய தளத்தில், வரும், 27 முதல் நவ., 2ம் தேதி மாலை, 5:00 மணி வரை பதிவு செய்து, கல்லுாரிகளைத் தேர்வு செய்யலாம்.
நவ., 2ம் தேதி
தாங்கள் தேர்வு செய்த கல்லுாரியை வரும், 28 முதல், நவ., 2ம் தேதி நள்ளிரவு, 11:59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், கல்லுாரிகளில் இடஒதுக்கீடு செய்யும் பணி நவ., 3 மற்றும் 4ல் நடைபெறும். இடஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் நவ., 5ல் வெளியிடப்படும்.கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் நவ., 6 முதல், 12ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு, நவ., 18 முதல், 22 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு, டிச., 10 முதல் 14 வரை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...