அரசு
கல்லுாரிகளுக்கு நிர்ணயித்துள்ள நேரத்தை, தனியார் கல்லுாரிகளுக்கும்
நீட்டிக்க கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, உயர் கல்வித்
துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது.
அன்று
பதில் அளிக்காவிட்டால், உயர் கல்வித்துறை செயலர் ஆஜராக வேண்டியது வரும்
என்றும் எச்சரித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்த,
கே.சுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனு:அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லுாரிகள்,காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை இயங்க வேண்டும் என,
கல்லுாரி கல்வி இயக்குனரகம் கூறியுள்ளதை, அரசு ஏற்று, 2020 ஜூலையில்
உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தில், 1,358 கல்லுாரிகள்
உள்ளன. 109அரசு கல்லுாரிகள்; 162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள்; 24 பல்கலை
உறுப்பு கல்லுாரிகள்; 1,063 தனியார் கல்லுாரிகள் உள்ளன. அரசு உத்தரவில்,
உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் பற்றி குறிப்பிடப்
படவில்லை. இந்த கல்லுாரிகளில், காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஒரு
பகுதி; பிற்பகல், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை ஒரு பகுதி என, இரண்டு
வகையான நேர அட்டவணை உள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவு, தனியார் கல்லுாரிகள்
மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கு பொருந்தவில்லை
.அரசு
கல்லுாரிகளுக்கும், மற்ற கல்லுாரிகளுக்கும் இடையே பாகுபாடு காட்டுவதாக
உள்ளது. அரசு கல்லுாரிகள் இயங்கும் நேரத்தை, தனியார் கல்லுாரிகள் மற்றும்
அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில்
கூறியுள்ளார்.மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்,
விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முதல் கட்டமாக, 50
அரசு கல்லுாரிகளில் அமல்படுத்துகிறோம். அதன், 'ரிசல்ட்' எங்களுக்கு
கிடைக்கவில்லை. பதில் அளிக்க, அவகாசம் வேண்டும்' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், 'தனியார் கல்லுாரிகளுக்கும் விரிவுபடுத்தப் போகிறீர்களா; இல்லையா; பதில் அளிக்க கடைசி வாய்ப்பு அளிக்கிறோம். 'தவறினால், உயர் கல்வித் துறை செயலர் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும்' என, எச்சரித்தனர். விசாரணையை, டிச., 8க்கு தள்ளி வைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...