தமிழகம் முழுவதும்
அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்கு
நர்களின் பணிநியமன ஆணை மற்றும் கல்விச்சான்றிதழ்கள் திடீரென
சரிபார்க்கப்பட்டு வருகிறது ) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த
மிட்ட அள்ளி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் , ஆசிரியராக
பணி புரிந்து வந்தவர் ராஜேந்திரன். இவர் , பத்தாம் வகுப்பு படிக்காமலேயே ,
போலி சான்றிதழ் கொடுத்து 21 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தது
சமீபத்தில் கண்டுபிடிக் கப்பட்டது. இதே போல் , மாநிலத் தின் பல்வேறு
பகுதிகளில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவ்வப்போது
குற்றச் சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனையடுத்து , தமிழகத்தில்
அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி
இயக்குநர் நிலை 1 , சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும்
ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப , பள்ளிக்கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அரசு பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் திடீர் சரிபார்ப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...