பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் இடம்பெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பு ஆண்டு கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்வி தொலைக்காட்சி மற்றும்இணையதளம் வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனினும், மாணவர்களிடம் பொதுத்தேர்வு குறித்த அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே பொதுத்தேர்வில்அதிக கேள்விகள் இடம்பெறும் எனதகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
அரசுப்பள்ளி மாணவர்கள் நலன்கருதி கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் அதிகஅளவிலான கேள்விகள் கேட்கப்பட உள்ளன. எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்காமல் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பகுதிகளை மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி நன்றாக படித்தால் போதும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...