பாடத்தில் ஏற்படும் குழப்பங்களை விட தற்போதைக்கு பள்ளித் திறப்பு எப்போது என்று முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் அரசின் அறிவிப்புகளால்தான் அதிக குழப்பம் அடைந்துள்ளார்கள் மாணவர்கள். இந்த விஷயத்தில் மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் குழப்பத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. படிப்படியாக ஊரடங்கு ஒவ்வொரு கட்டமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இப்போது வரை பள்ளிகள் திறப்பு இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
ஜூன் மாதம் முதல் இந்த கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் ஆன் லைன் வழி கல்வியை அறிமுகப்படுத்தின. அதன் பின் அரசுப் பள்ளிகளும் ஆன் லைன் வழி கல்வியை கையிலெடுத்தன. ஆனால் ஆன் லைன் வழி கல்விக்கு தேவையான கணினி, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை இல்லாத மாணவர்கள் ஆன் லைன் வழி கல்வியால் பலன் பெற முடியவில்லை என்ற பரிதாபமும் ஒரு பக்கம் நிலவுகிறது. சில மாணவர்கள் இதனால் தற்கொலை செய்துகொண்ட பரிதாபங்களும் தமிழகத்தில் நடந்தன.
இன்னொரு பக்கம் கடந்த சில மாதங்களாகவே தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியிட்டு வரும் கருத்துகளும் ஒன்றோடொன்று முரண்பட்டே இருக்கின்றன. இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது, முதலமைச்சர் முடிவு செய்வார் என்பது போன்ற அமைச்சரின் பேட்டிகளைப் பார்த்து பெற்றோர்களும் ஆற்றாமை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்டு 11 ஆம் மத்திய கல்வி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...