இவர் கடந்த 1991 - ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.இவரதுகல்விச்சான்றிதழ்களில் பிறந்த தேதி 20.10.1961 என குறிப்பிடப்பட் டிருந்தது . கணேசமூர்த்தி சென்னை எழும் பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 10.10.1962 அன்று பிறந்துள்ளார் . அதுதொடர்பாக சென்னை மாநகராட்சி யில் கடந்த 1962 - ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது . தன் னுடைய பிறந்த தேதியை மாற்றக்கோரி கணேசமூர்த்தி தமிழக அரசிடம் முறையிட் டார் . அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட் டது .
இதனையடுத்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது . இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார் . வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதி பதி , கணேசமூர்த்தியின் 3 அண்ணன்கள் , 2 தங்கைகள் பிறந்த தேதி தொடர்பான ஆவ ணங்களைப் பரிசீலித்து , கணேசமூர்த்தி யின் பணிப்பதிவேட்டில் பிறந்த தேதியை 10.10.1962 என மாற்ற தமிழக அரசுக்கு உத் தரவிட்டார் . இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் தது . இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிப திகள் , ஆர்.சுப்பையா , சி.சரவணன் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதி பதிகள் , தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர் . தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளு படி செய்தனர் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...