உயர் கல்வி ஊக்க ஊதியம் ரத்து அக்டோபர் 28ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்ததை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அக்.28ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆசிரியர்கள் பணியில்இருந்து கொண்டே பயில்வதை ஊக்குவிக்க உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. ஆசிரியர் பணிக்காலத்தில் அதிபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை 50 ஆண்டுகளாக பெற்றனர்.
அக்.,15ல் வெளியான அரசாணையில் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.3 லட்சம் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது நியாயமற்றது. இந்த உத்தரவு மற்றும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை ரத்து செய்ய வலியுறுத்தி அக்.,28 ல்மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்'' என குறிப்பிட்டுஉள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...