பகுதிநேர பி.இ., பிடெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அக்.12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், தமிழகத்தில் செயல்பட்டு வரும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் படிப்புகளுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதுகுறித்துப் பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ கூறும்போது, "மொத்தமுள்ள 1,465 இடங்களுக்கு 1,201 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 520 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அக்டோபர் 12-ம் தேதி காலை 10 மணிக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 14-ம் தேதி நடைபெறும். பொதுப்பிரிவினருக்கு 15, 16-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...