Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET நிபந்தனை ஆசிரியர்கள் - பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து ஆசிரியர் தினம் கொண்டாடியதில்லை!

பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து ஆசிரியர் தினம் கொண்டாடியதில்லை! -  புத்தாக்க பயிற்சி அரசாணையை எதிர்பார்த்து காத்துள்ள  1500 TET நிபந்தனை ஆசிரியக் குடும்பங்கள்.
images%2528102%2529
RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் TET தேர்ச்சி என்பது அவசியம் என அப்போதைய மத்திய அரசு கூறியது.

ஆனால்
தமிழகத்தில் அரசாணை எண் 181 பிறப்பித்து இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் 16/11/2012 ல் தான் தெரிவிக்கப்பட்டது. 

ஆக 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET பற்றிய நிபந்தனைகளை தமிழக அரசு முழுமையாக தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்தது.
இதை தமிழக அரசு உதவிபெறும் பள்ளிகள் செயலாளர்கள் சங்கம் வாயிலாக பலமுறை உறுதிப்படுத்தினர்.

இந்த சிக்கலான சூழலில் TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு பல்வேறு வழக்குகள் இன்றும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது வந்த தீர்ப்புகள் ஆசிரியர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு அளித்தது போல, 1500 அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் ONLINE ல் புத்தாக்கப்பயிற்சி தந்து, ஆசிரியர்களை தகுதிப்படுத்தும் விதமாக பயிற்சி தர வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசு கொள்கை முடிவில் மாற்றம் செய்து இந்த பாதிக்கப்பட்ட 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் காக்கும்படியும், TETலிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என TET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

இது பற்றி பிரபல கல்வியியலாளர் திரு.செந்தில் அவர்கள் கூறுகையில்,

 "பாதிக்கப்பட்ட ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் TET - 150 கேள்விகள் மூலமாக தகுதியை நிர்ணயம் செய்வது சரியான தீர்வு அல்ல எனவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்கள் தங்களை புதுப்பிக்கும் விதமாக பல்வேறு கல்விக் கூட்டங்களில், Seminars, Paper presentation உள்ளிட்ட விசயங்களில் தமிழக அரசானது கண்காணிப்பு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் தரலாம். அதற்கான பயிற்சிகள் மற்றும் கல்வி நுட்பங்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தரலாம்.
புத்தாக்கப் பயிற்சியை தர சென்னை உயர்நீதிமன்றம் கூட அறிவுருத்தியுள்ளது.

மேலும்,
1500 ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தாலே TET தொடர்பான சுமார் 350 வழக்குகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். 

புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமலாக்கம் பெறும் முன்பே, இந்த கொரோனா காலகட்டத்தில் online வழியாக,
 TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு தர தமிழக அரசு முன்வந்தால் சுமார் 1500 ஆசிரியர்கள் குடும்பங்கள் காக்கப்படும். 

மேலும் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து நிம்மதியற்ற சூழலில், பயத்துடனே பணிபுரியும் இந்த அரசு உதவிபெறும் பள்ளிகளின் TET நிபந்தனை ஆசிரியர்கள் இதுவரை எந்தவொரு ஆசிரியர் தினத்தையும் மகிழ்வுடன் கொண்டாடியதே இல்லை.

தமிழக அரசு கருணை காட்டும் பட்சத்தில் நீதிமன்ற TET வழக்குகள் அனைத்தும் முழுவதும் தானாகவே ஒன்றும் இல்லாமல் போய்விடும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு கல்வி அமைச்சர் உறுதியளித்ததன் அடிப்படையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விரைவில் Online வழியாக புத்தாக்கப் பயிற்சி அளித்து, இந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும்" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive