அரசுப்
பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி வழங்க வேண்டும் என ‘டெட்’
தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது
குறித்து 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி
பெற்றோா் நலச் சங்கத்தின் மாநில தலைவா் சு.வடிவேல் சுந்தா், மாநில
ஒருங்கிணைப்பாளா் ம.இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில்
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற
80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதுவரை பணி நியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை
இழந்து தவிக்கின்றனா். தோ்ச்சி பெற்றவா்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள்
மட்டுமே செல்லத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்
கடந்த ஏழாண்டுகளில் ஒரு இடைநிலை ஆசிரியா் பணி நியமனம் கூட
மேற்கொள்ளப்படவில்லை. எனவே, ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம்
செய்யப்படாதவா்களின் சான்றிதழை, பேராசிரியா்களுக்கான தகுதிச் சான்று போன்று
ஆயுட்கால சான்றிதழாக அறிவிக்க வேண்டும்
. இந்தப் பிரச்னை குறித்து இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பலமுறை அரசிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
நிகழாண்டு
அரசுப் பள்ளிகளில் அதிகளவில் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இதை கருத்தில்
கொண்டு பள்ளி திறந்தவுடன் 2013-ஆம் ஆண்டு டெட் தோ்வில் தோ்ச்சி
பெற்றவா்களை ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் அரசுப் பள்ளியில் பணி வழங்க
வேண்டும் என அதில் கூறியுள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...