Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SBI Bank வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட Alert NEWS



SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் ஆன்லைன் வங்கி மோசடிகளில் வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், மோசக்காரர்கள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முற்படுவார்கள் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விளக்கியுள்ளது. குறிப்பாக இதை மட்டும் செய்யாதீர்கள் என்று SBI ஒரு காரணத்தையும் குறிப்பிட்டுள்ளது. அதிகரிக்கும் ஆன்லைன் வங்கி மோசடி இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வங்கி மோசடிகள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் வைத்துள்ள பயனர்களைக் குறிவைத்தே நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக SMS, வாய்ஸ் கால் அழைப்பு, ஈமெயில் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வழிகளில் தான் தற்போதைய மோசடிகள் பெரும்பாலும் நடக்கிறது. நீங்கள் செய்யும் ஒரு சிறிய வாட்ஸ்அப் தவறு மோசடி செய்பவர்களுக்கு உங்கள் வங்கிக் கணக்கை அப்படியே அம்பலப்படுத்திவிடும் என்று SBI எச்சரித்துள்ளது.

 உங்கள் வங்கி கணக்கை வேட்டையாட முயற்சி சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் நிதி மோசடி செய்பவர்கள் என்று பல மோசடி கும்பல்கள் உங்கள் வங்கி கணக்கை வேட்டையாடப் பொறிவைத்துக் காத்திருக்கின்றனர். ஸ்மார்ட்போன் மூலம் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணக்கை நொடியில் சூறையாடுவதே இவர்களின் நோக்கம். அதிகரித்து வரும் மோசடிகளைக் கருத்தில் கொண்டு, SBI வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து SBI பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து SBI தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் அழைப்புகள் அல்லது SMS வந்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஆன்லைன் மோசடிகள் எந்த வழியில் உங்களிடம் வரும் என்பதையும் SBI தெளிவாக விளக்கியுள்ளது.

அது என்ன என்று இப்பொழுது பார்க்கலாம். உங்களுடைய ஆசை தான் ஆபத்து முதலில் மோசடிக்காரர்களின் தாக்குதல் பெரும்பாலும் உங்களுக்கு லாட்டரி அடித்துவிட்டது போலவும், அல்லது சில பரிசை நீங்கள் வென்றது போலவும் உங்களுடைய ஆசையைக் கிளப்பிவிடும் வடிவத்திலே இருக்கும். இந்த பரிசை நீங்கள் பெறுவதற்கு உங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குத் தகவல், போன் நம்பர் போன்ற தகவல்களை கேட்பார்கள். வங்கி ஒருபோதும் 'இந்த' வழியில் உங்களை அணுகாது இந்த செய்திகள் எப்போதும் போலியானவை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இவற்றை முற்றிலுமாக புறக்கணிப்பது உங்களுக்கு நல்லது.

 SBI வெளியிட்டுள்ள தகவலின்படி, உங்கள் மொபைல் எண் மூலம் SMS, அழைப்பு, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் போன்ற தளங்களின் வழியாக வங்கி ஒருபோதும் உங்கள் கணக்கு விபரங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை கேட்காது என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளது. OTP விபரங்கள் வங்கிக்கு தேவையா? அல்லது மோசடிக்காரர்களுக்கு தேவையா? மோசடி செய்பவர்களின் முக்கிய நோக்கமே உங்களுக்கு ஆசைகாட்டி உங்கள் கணக்கை காலி செய்வது தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகையால் வீணாய் ஆசைப்பட்டு உங்களிடம் உள்ளதை இழக்காதீர்கள். எப்பொழுது OTP எண்களை யாரிடமும், எந்த சூழ்நிலையிலும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். வங்கி உங்களுடைய OTP விபரங்களை ஒருபோதும் கேட்காது. ஆனால், மோசடிக்காரர்களுக்கு உங்கள் பணத்தை திருட இது மிகவும் முக்கியம்.

 SBI வங்கி பாணியில் போலி மின்னஞ்சல்.. உஷார் மக்களே! சமீபத்தில் SBI வங்கியின் வாடிக்கையாளர்களுக்குப் போலி மின்னஞ்சல்கள் அதிகமாக வருவதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தது, குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் பாணி உண்மையான SBI வங்கியின் மின்னஞ்சல் போலவே இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. SBI வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி இதுபோன்ற போன்ற போலி மின்னஞ்சல்களை வாடிக்கையாளர்கள் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று SBI வங்கி எச்சரித்துள்ளது. வங்கி சார்பாக இதுபோன்ற எந்த மின்னஞ்சலும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படவில்லை என்றும் SBI வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலையும் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மோசடியிலிருந்து தப்ப இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள் என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதை மட்டும் ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள் முதலில் எப்போதும், யாருடன் உங்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் ஆன்லைன் பேங்கிங் கணக்கு கடவுச்சொல்லை அடிக்கடி தொடர்ந்து மாற்றம் செய்யுங்கள். தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது SMS மூலம் உங்கள் இணைய வங்கி விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். முக்கியமாக எந்த லிங்க்-களையும் ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்று வங்கி எச்சரித்துள்ளது. SBI கிளையை அணுகுங்கள் அதேபோல், எப்பொழுதும் வங்கி தொடர்பான தகவல்களுக்கு SBI வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மட்டும் பயன்படுத்துங்கள்.

 உங்களுக்கு மோசடி குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அருகில் உள்ள SBI கிளையை அணுகுங்கள். மனதில் இதை பதிய வையுங்கள் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து தப்பிக்கப் போலி லிங்க்- மட்டும் கிளிக் செய்யாதீர்கள். இதுபோன்ற பாதுகாப்பான செய்தியை மக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று SBI கூறியுள்ளது. இனியும் ஆன்லைன் மோசடியில் சிக்கி உங்களுடைய பணத்தை வீணாய் இழக்காதீர்கள். எப்பொழுதும் உஷாராக இருங்கள். குறிப்பாக வங்கி எப்பொழுதும் உங்களை போனில் தொடர்புகொள்ளாது என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive