மாணவர்கள், க்யூ ஆர் கோட் அதிகம் பயன்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா பாதிப்புகளால், மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப்களில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், பாடப்பதிவுகள் உருவாக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி டிவியிலும், வானொலி மூலமாக, பாடங்களை ஒளி, ஒலிபரப்பவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர, மாணவர்களின் பாடப்புத்தகங்களில், அவர்கள், மொபைல் மூலம், ஸ்கேன் செய்யும் க்யூஆர் கோட்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதை ஸ்கேன் செய்து, அதில் வரும் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களையும், அறிந்து கொள்ள, தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாணவர்கள் அதை பயன்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு இதுகுறித்து சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், புத்தகங்களில் உள்ள க்யூ ஆர் கோட்டை பயன்படுத்தி, பாடம் சார்ந்த கூடுதல் தகவல்கள் அறிந்துகொள்வது, அவர்களுக்கு, அடிப்படை கல்வித்திறனை மேம்படுத்தும் என, ஆசிரியர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...