முதுகலை மாணவர்களுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்று ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''ஏஐசிடிஇ
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் எம்.இ., எம்.டெக்.,
எம்.பார்ம்., எம்.ஆர்க். படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை
வழங்கப்படும். அதற்கு மாணவர்கள் கேட் தேர்வில் (GATE) அல்லது ஜிபேட் (GPAT)
நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள்
முழுநேர முதுகலைப் படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். பகுதிநேரப்
படிப்பு படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற முடியாது. படிப்பு முடியும்வரை
அல்லது 24 மாதங்கள் என எது சீக்கிரம் வருகிறதோ அதுவரை கல்வி உதவித்தொகை
வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் ஒரே பெயரில் உள்ள சேமிப்புக் கணக்கை
வைத்திருக்க வேண்டும்.
ஓபிசி க்ரீமிலேயர் பிரிவின் கீழ்
தேர்வாகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது. மற்ற பிரிவினருக்கு
உரிய சான்றிதழைச் சமர்ப்பித்தால் உதவித்தொகை அளிக்கப்படும்.
எஸ்சி/
எஸ்டி/ ஓபிசி (க்ரீமிலேயர் அல்லாதோர்)/ மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரி
முதல்வர் அல்லது உரிய அதிகாரியின் கையொப்பத்தைப் பெற்று ஆவணங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தகவல்களைச் சரிபார்க்க வேண்டிய கடைசித் தேதி டிசம்பர் 31''.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க:
இணைய இணைப்பு
கூடுதல் விவரங்களுக்கு: 011-26131576- 78, 80
இ-மெயில் முகவரி: pgscholarship@aicte-india.org
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...