புத்தகங்களே..!
பெற்றோர்களே...!
பிஞ்சுகள்
உயிர்வாழ
கற்றுக் கொடுங்கள்.
அவர்களின்
கனவுகளை
நீங்கள்
முடிவு செய்யாதீர்கள்.
#RIP ஜோதி ஶ்ரீதுர்கா
நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தமிருக்கிறது. நீயும் விரும்பினாய் என்றுதான் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். அதுமட்டும்தான் வாழ்க்கை என்று நினைத்துவிடாதே. நீ டாக்டர் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என்ன நடந்தாலும் நாங்கள் உன்னோடுதான் இருப்போம்" என்று பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். தப்பான முடிவெடுக்க மாட்டேன் என்று பிள்ளைகளிடம் சத்தியம் கூட வாங்கலாம்.
பத்திரிகையில் குழந்தைகளைப் பற்றிய குற்றச் செய்திகள் வரும்போது, தான் பெற்ற பிள்ளைகளை அழைத்து விழிப்புணர்வு ஊட்டுகிற ஆசிரியர்கள், அதைத் தங்களிடம் படிக்கிற குழந்தைகளிடமும் சொல்ல வேண்டும்.
#சபரிமாலா (ஆசிரியர்)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...