5ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு. சுய விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு த.செல்லும் அரசாணை நிறுத்திவைப்பு.
5ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.
29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி , தமிழ்நாட்டில் 1.10.2020 முதல் , அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது . இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும் , மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும் , தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும் , மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது . இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.
சுய விருப்பத்துடன் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்திவைப்பு.
பள்ளிகள், கல்லூரிகள் இயங்குவதற்கு தடை நீட்டிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...