Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CEO Office கண்காணிப்பாளர் கைது.


ராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் 47 பணியில் சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -4 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 43 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்.17, 18 ல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடந்தது. 37 இடங்கள் நிரப்பப்பட்டன. 6 இடங்கள் காலியாக இருந்தன.மண்டபம் கல்வி மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு காலி இடங்களில் சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 


மற்றொரு பணியிடத்தில் ராமநாதபுரம் சூரன்கோட்டை காலனி வலம்புரி நகரை சேர்ந்த ராஜேஷ் 32 பணியில் சேர்ந்தார்.ராஜேஷின் பணி நியமன ஆணை மீது சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆய்வு போது போலி உத்தரவு என்பது தெரிந்தது. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தியிடம் தெரிவித்தார். அவர் மாவட்ட எஸ்.பி. கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. திருமலை விசாரித்தார். 

அதிகாரி கைது

போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மைக்கல்வி அலுவலக இருக்கை கண்காணிப்பாளர் (டெஸ்க் சூப்பிரண்டு) மென்னந்தி கிராமத்தை சேர்ந்த கண்ணன் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராக பணியாற்றும் எஸ்.காவனுாரை சேர்ந்த கேசவன் 45, ராஜேஷ் 32, பாம்பன் பள்ளியில் சேர்ந்த பரமக்குடி அண்ணாநகர் கலைவாணன் 26, கரையூர் பள்ளியில் சேர்ந்த சதீஷ்குமார் 33 ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.ஆர்.எஸ்.மங்கலம் பள்ளியில் பணியில் சேர்ந்த மண்டபத்தை சேர்ந்த மனோஜ் தலைமறைவானார். அவரை தேடி வருகின்றனர்.-----போலி ஆணை தயாரித்தது எப்படிஉண்மையான பணி நியமன ஆணையில் பெயரை மட்டும் பேப்பர் வைத்து மறைத்து வேறு பெயரை சேர்த்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் முதன்மைக் கல்வி அலுவலரின் பணி நியமன ஆணை உத்தரவின் மூலம் ஆவணங்களை திருத்தியமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல லட்ச ரூபாய் கைமாறியுள்ளது.இதே போல் முந்தைய ஆசிரியர் தகுதி தேர்வுகளிலும் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் பல முறைகேடு வெளிச்சத்திற்கு வரலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive