Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும் தகுதி: திருத்தம் கொண்டுவர பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் பரிந்துரை

 பிளஸ்2வை தனித்தேர்வராகவும், பட்டப்படிப்பை தொலைதூர கல்வியிலும் முடித்த கிருஷ்ணகுமார் என்பவர் சட்டப்படிப்பில் சேர்வதற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்  சட்டப் பல்கலையில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பரிசீலித்த  பல்கலை தொலைதூர கல்வியில் படித்த காரணத்துக்காக நிராகரித்தது. இதை எதிர்த்து, கிருஷ்ணகுமார்  தாக்கல் செய்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது,  தொலைதூர கல்வியில் படித்தவர்களும் சட்டப்படிப்பில் சேர   பார் கவுன்சில் விதிகளின்படி தகுதி உண்டு என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து,  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற வகையில், பார் கவுன்சில் விதிகளில் திருத்தத்தை இந்திய பார்கவுன்சில் கொண்டுவர வேண்டும். அப்படி விதிகளில் திருத்தம் செய்தால் மட்டுமே சட்டக்கல்வியின் தரம் பேணி பாதுகாக்கப்படும். தற்போதுள்ள விதிகளின்படி மனுதாரர் கிருஷ்ணகுமார் விண்ணப்பிக்க தகுதி உடையவர்தான். பிற தகுதிகளை பெற்றிருக்கும் பட்சத்தில் 2020-21ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!