தமிழ்நாடு
தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை
பட்டப் படிப்புகள்; பி.ஜி.டி.எல்.ஏ., தொழிலாளர் நிர்வாகத்தில், முதுநிலை
மாலை நேர பட்டயப் படிப்பு.மற்றும் டி.எல்.எல்., மற்றும் ஏ.எல்., தொழிலாளர்
சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும், வார இறுதி பட்டயப் படிப்புகளாக
நடத்தப்படுகின்றன.
இவை, சென்னை பல்கலையால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பட்டம் பெற்ற மாணவர்கள், எம்.ஏ., மற்றும் பட்டயப்
படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள், மதிப்பெண்
அடிப்படையில், அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர்.அடுத்த மாதம், 16ம்
தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள்.
விண்ணப்பங்களை, சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பெறலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 100 ரூபாய் கட்டணம்.மேலும் விபரங்களுக்கு, 044 -- 2844 0102, 2844 5778 என்ற, எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...