தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 17ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவது அறிந்ததே.
இந்நிலையில் பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,
அவர்கள் பெயரைச் சொல்லி பல வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் பள்ளி வேலை நேரம் காலை ஒன்பது முப்பது முதல் மாலை 4.10 வரை பள்ளியில் இருக்க வேண்டும் மேலும் பள்ளிக்கு வராதவர்களுக்கு தற்செயல் விடுப்பு மருத்துவ விடுப்பு போன்ற உரிய விடுப்புகள் பதியப்பட வேண்டும் என பல்வேறு உத்தரவுகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஒன்றியத்துக்கு ஒன்றியம் மாறுபட்டு வாய்மொழி வழியாகவும் ,
வாட்ஸ் அப்பில் செய்தியாகவும்,
குரல்வழி செய்தியாகவும் வட்டார கல்வி அலுவலர்கள் பதிவிட்டு இதையே காரணம் கூறி பார்வை என்ற பெயரில் பண வசூல் நடப்பதாக பல மாவட்டங்களில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில்.
இன்றைய தினம் காலை நமது அய்யா செ.முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் கூறினார்..
ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்ல தயார் என்றும் ஆனால் ஆசிரியர்கள் பள்ளியில் என்ன வேலை செய்யவேண்டும் என்பதை வரையறுத்து சுழற்சி முறையில் செல்ல வேண்டுமா அல்லது தொடர்ந்து அனைவரும் செல்ல வேண்டுமா அவ்வாறு பள்ளிக்குச் சென்றால் என்னென்ன வேலைகளை பள்ளி சார்ந்து செய்யப்பட வேண்டும் என்ற தகவல்களை முறைப்படுத்தி பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களோடு தொடர்புகொண்டு ஒருசேர தமிழகம் முழுமைக்கும் உண்டான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கேட்டுக் கொண்டார்
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுடன் இன்று ஆலோசனை செய்து உரிய வழி காட்டு முறைகள் வெளியிடுவதாக நமது மாநில தலைவர் ஐயா செ. முத்துசாமி அவர்களிடம் உறுதி அளித்துள்ளார் தகவலுக்காக அனுப்பப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...