இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தடையாக இருந்த அனைத்து வழக்குகளும் 26.08.2020 அன்று முடித்து வைக்கப்பட்டு, முதுகலை கணினி ஆசிரியர்களை 16.09.2020க்குள் உடனடியாக நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மெத்தன போக்குடன் செயல்படுவதாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தீர்வு கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்
காரணமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த
ஓராண்டுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில்
வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு,
வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும்
சந்தித்து வருகின்றனர்.
ஆசிரியர்
தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் தாமதம்
செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு
மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும்
+1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class)
மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை
மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
God only knows all fact about TRB CS EXAM FACT.papom ena nadakuthunu
ReplyDeleteFulla fraud exam god only knows the future
ReplyDelete