அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.12 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.அவர்களில், 95 ஆயிரம் பேர், தமிழக பாட திட்டத்தில் இருந்தும், 16 ஆயிரம் பேர், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,பாட திட்டத்தில் இருந்தும், 554 பேர் இந்திய சான்றிதழ் கல்வி வாரியமான, ஐ.சி.எஸ்.இ., பாட திட்டத்தில் இருந்தும் விண்ணப்பித்துள்ளனர். ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற, பிற மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள பாட திட்டத்தில் படித்து விட்டு வந்த, தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 444 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில், முதல், 10 இடம் பெற்றவர்களில் யாரும், 200க்கு, 200 கட் - ஆப் பெறவில்லை. முதல் மதிப்பெண், 199.67 ஆகும்.
முதல், 10 பேர் விபரம்: முதல் இடம் - சஸ்மிதா, கோவை, ஆர்.எஸ்.புரம்; 2 - நவநீதகிருஷ்ணன், செய்யார், திருவண்ணாமலை; 3 - காவ்யா, கீழ் குந்தா, நீலகிரி,; 4 - ஆதித்யா, கே.கே.நகர், சென்னை; 5 - பிரவீன்குமார், வெங்கிக்கால், திருவண்ணாமலை. ஆறாம் இடம் - நந்தினி, அரக்கோணம்; 7 - லோகித்வேல் கோபி கண்ணன், தேனி; 8 - சுதீப், பொள்ளாச்சி; 9 - ஷீபா கிரேஸ், கன்னியாகுமரி, 10 - குணால் வினோத், கே.கே.நகர், மதுரை.
பி.ஆர்க்., படிக்க 2,005 பேர் தகுதி அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் சேர, 3,281 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 2,005 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். மொத்தம், 51 கல்லுாரிகளில், 1,800 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.ஆர்க்., படிப்பில் சேர தகுதியான, நாட்டா - 2ம் கட்ட நுழைவு தேர்வு முடிவுகள் வந்தவுடன், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும் என, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...