ஆன்லைன் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் தற்போது அமேசான் கிராண்ட் கேமிங் டே சேல் என சலுகையை அறிவித்துள்ளது. இது சலுகையானது கடந்த செப்டம்பர் 19 அன்றிலிருந்து நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்த அதிரடி சலுகை விற்பனையானது செப்டம்பர் 21 வரையில் அமலில் இருக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. இந்த கிராண்ட் கேமிங் டே சேலில் 24 மணி நேரமும் இந்த சலுகையை பெற்றுக் கொள்ள முடியும். நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 31% வீழ்ச்சி..! கேமிங் சலுகை இந்த சலுகையானது பெயரில் உள்ளது போல, இந்த விற்பனை செய்யப்படும் பொருட்கள் விளையாட்டாளரை மையாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கேமிங்க் லேப்டாப்கள் மற்றும் மானிட்டர்கள், ஹெட் போன்கள், கேமிங் கன்சோல்கள், டிவிகள், கிராபிக் கார்டுகள் உள்ளிட்ட பலவும் 50 சதவீதம் வரையில்ள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. என்னென்ன பிராண்டுகளுக்கு ஆஃபர் இந்த அதிரடி சலுகை விற்பனையில் லெனோவா, ஏசர், ஆசுஸ், எல்ஜி, சோனி, டெல், ஏலியன்வேர், ஜிகாபைட் உள்ளிட்ட பிராண்டுகள் உள்ளன. இந்த விற்பனையானது செப்டம்பர் 21 வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...