அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி
கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி, இறுதி ஆண்டு தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து
செய்து அறிவித்தார். அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்வுக்கு பணம்
கட்டி இருந்தால், அந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி
பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த
நிலையில் இருந்த விவகாரத்தில், ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்
வெளியானது. இதனை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவும்
தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம்
எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் மறுப்பு
தெரிவித்தார். மேலும் அப்படியான கடிதம் அனுப்பி இருந்தால் அதனை வெளியிட
வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அண்ணா
பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஏஐசிடிஇ தலைவர் எழுதிய கடிதம்
வெளியாகி உள்ளது. அதில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதைஏற்க
முடியாது எனவும் அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில்
நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உத்தரவை மீறினால் அண்ணா
பல்கலைகழத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே
எஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம்
ரத்தாகும் என்ற விதியும் உள்ளது. இதனால் இந்த விவகாரம் தற்போது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...